.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 1, 2013

நண்டுகள் பலவிதம்!

 கடலிலோ, நிலத்திலோ வாழும் எந்த நிறத்திலும் இருக்கும் பக்கவாட்டில் நீந்தும், நடக்கும் தன் வீட்டை தானே சுமக்கும் அது என்ன? வேறென்ன? நண்டுதான்! சரியாய் யூகித்தீர்களா…(குட்டி நண்டுகளா!)* நண்டு தன் பின் நான்கு ஜோடி கால்களை பக்கவாட்டில் வேகமாய் நகர பயன்படுத்துகிறது.* இந்த முதுகெலும்பு எட்டுக்கால் பூச்சி நண்டு பெரும்பான்மையான எதிரிகளிடமிருந்து அதன் ஓட்டினால் பாதுகாக்கப் படுகிறது.* கால்கள் தேய்ந்தோ, உடைந்தோ போனால் நண்டுகள் புதிதாய் வளர்த்து கொள்ளும்.* அவைகளின் வலிமையான வளை நகங்களை சண்டை போட, மீன்களை கிழிக்க, சிப்பியை பிளக்க, தாவரங்களை உண்ண பயன்படுத்துகிறது.* இந்த ஓடு, “ஆமை ஓடு’ எனப்படுகிறது.* நண்டு தம் ஓட்டை விட பெரிதாகும் போது ஓட்டை உடைத்து திறந்து...

ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்?

ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்….. அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை. இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.உங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்….. அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க...

மர்மத்தீவு ஒரு பார்வை!

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும்...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்."என்னடா விஷயம்?' என வினவினோம்..."அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி...
Page 1 of 77712345Next

 
back to top