மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும் எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள்.நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும்...
Thursday, December 12, 2013
Wednesday, December 11, 2013
வீட்டுக் குறிப்புகள்!
வீட்டுக் குறிப்புகள்:1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள்....
வளர்பிறையில் ஏன் விழாக்கள் கொண்டாடுகின்றனர் ஆராய்வோமா?

பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திருவிழா போன்ற பல விழாக்களை கொண்டாடினார்கள். அவ்விழாக்களை கொண்டாடுவதற்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை. மக்கள் ஒன்று கூட தொலை தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது, வாகன வசதிகள் பெருமளவில்லை. மாட்டு வண்டிகள் தான் இருந்திருக்கிறது, அதில் எப்படி தொலைதூரம் வேக பயணம் செய்ய முடியும்? ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அப்படியாயின் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதல்லவா. ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து மின்சாரம் வந்தது? ஒளிபரப்பி எல்லாம் எங்கிருந்து வந்தது? எல்லாம் தீப்பந்தம் தான் தீப்பந்தம் மூலம் எப்படி பெரிய விழாக்களை கொண்டாடமுடியும்? அதன் ஒளி போதுமானதாக இருக்குமா, இரவு பகல் அதிக தூரம் பயணிக்க...
செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது.இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற பல தனிமங்கள் இந்த ஏரியில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில்...