.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

சமூக சேவை செய்பவர்களுக்காக பேஸ்புக் வழங்கும் புதிய வசதி...

சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது “Share” மற்றும் “Like” பொத்தான்களைப் போன்று “Donate Now” எனும் பொத்தானை தற்போது அறிமுகப்படுத்துகின்றது. எதிர்காலத்தில் நண்பர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ நன்கொடைகள் வழங்க விரும்புபவர்கள் இவ்வசதியினை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது....

விஸ்வரூபம் 2: கமல் ஒப்பன் டாக்!

விஸ்வரூபம் 2 முதல் பாகத்தை மிஞ்சும் என்று கூறியுள்ளார் உலகநாயகன்.கமலின் விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பேஸ்புக் நண்பர்களுக்காக தான் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.அதில், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட மிக அற்புதமாக வந்திருக்கிறது. மேலும் திகதி இன்னதென்று குறிப்பிட முடியவில்லையே தவிர விரைவில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த...

கடவுள் வேடத்தை விக்ரம் ஏற்பாரா?

டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஏற்க விக்ரமிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சோலோ ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா போன்ற இளம் ஹீரோக்களின் மவுசால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு என்ற படத்தில் மகேஷ்பாபுவுக்கு அண்ணனாக நடித்தார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். ஆனால் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். கடைசியில் அங்காடி தெரு அஞ்சலி ஜோடியாக நடித்தார். இப்படம் ஹிட்டானது.இதைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக ஷேடோ, மசாலா என 2 படங்களில் வெங்கடேஷ் நடித்தார். அப்படங்கள் தோல்வி அடைந்தது. தற்போது இந்தியில்...

பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா..?

பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினியை நடிக்க கேட்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அதற்காக பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடியாகிறது. ரஜினி நடித்து சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படம் அந்த காலகட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற சூழலையும் ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த பேச்சு அடங்கிப்போனது. ஆனாலும் பாட்ஷா படம் ரசிகர்கள் மனதில் இன்னும் பரபரப்பாக பேசப்படும் படமாகவே இடம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் பாட்ஷாவின் 2ம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.சமீபத்தில் ரஜினியை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா 2ம் பாகம் படத்தை உருவாக்குவதுபற்றி ஆலோசித்தார்....
Page 1 of 77712345Next
 
back to top