.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 8, 2014

விரைவில் வருகிறது புரட்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்

புரட்சித் தலைஹிவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியாகவுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்த “கர்ணன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, புதிய திரைப்படங்களுக்கு சவாலாக இருந்ததுடன், வசூலையும் வாரிக்குவித்தது நினைவிருக்கலாம். இந்தப் புதிய ஐடியாவை அன்றைய மெஹாஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவதன் மூலம் தொடரலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பார்கள் போலும். அதனால் மக்கள் திலகத்தின் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. கடந்த 1965 ஆம் ஆண்டு பத்மினி பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார்,...

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்..?

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்?  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு...

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..! இன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது.அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம். எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும்....

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்  பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள். காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும்...
Page 1 of 77712345Next
 
back to top