.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, July 3, 2014

நான் படித்ததில் எனக்கு பிடித்தது - இதோ உங்களுக்காக...!

* பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும். * மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய...

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்...!

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும். அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம்....

Saturday, February 1, 2014

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா..!

ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் ‘ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு  எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்ட கேஜ்ரிவால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.இந்தப்...

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி..!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு...
Page 1 of 77712345Next

 
back to top